/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமிட்டிபதி தடுப்பணை சீரமைப்பு
/
குமிட்டிபதி தடுப்பணை சீரமைப்பு
ADDED : பிப் 21, 2026 05:10 AM
கோவை: மேற்கு தொடர்ச்சி மலையில், அய்யாசாமி மலையில் உருவாகும் மஞ்சுப்பள்ளம் என்ற ஓடை கோவைப்புதுார் மலையில் இருந்து மேற்கு திசையில் ஓடி, சுகுணாபுரம், மைல்கல், குறிச்சி வழியாக வலதுபுறம் திரும்பி மதுக்கரை சந்தை, திருமலையாம்பாளையம், வேலந்தாவளம் வழியாக கேரளாவுக்குள் நுழைகிறது.
குமிட்டிபதி ஆற்றின் முக்கிய கிளை நதிகளில் மஞ்சுப்பள்ளம் முக்கியமானது. மழை காலத்தில் வெள்ளம் பெருக்கெடுப்பதால், தேக்கி வைக்க முடிவதில்லை. தடுப்பணையை சீரமைத்தால், 10 திறந்தவெளி கிணறுகள், 20 போர்வெல் கிணறுகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.
200 ஏக்கர் பாசன வசதி பெறும் என யோசனை தெரிவிக்கப்பட்டது. நீர்வள துறை இப்போது அதற்கான வேலையை தொடங்கி உள்ளது. ''ரூ.1.63 கோடியில் தடுப்பணை சீரமைப்பை துவக்கியுள்ளோம். தடுப்பணை அமைந்துள்ள பாலம் முதல் சாயிபாபா கோயில் வரை தடுப்புச்சுவர் கட்டவும் ரூ.7 கோடியில் வேலை நடக்கிறது” என உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார் கூறினார்.

