ADDED : டிச 01, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்: கோவை, குனியமுத்துார் அடுத்து கோவைபுதுாரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான வீட்டில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜாராம் யாதவ். 53 என்பவர் கடந்த ஐந்தாண்டுகளாக தனியே வசித்து வந்தார். இவர் குங்பூ மாஸ்டர்.
நேற்று முன்தினம் அதிகாலை காவலாளி கிருஷ்ணசாமி வீட்டிற்கு வந்தார். கதவு திறந்திருப்பதை கண்டு உள்ளே சென்றபோது, உடல் அழுகிய நிலையில் ராஜாராம் யாதவ் சடலமாக கிடப்பதை கண்டார். இது குறித்து சீனிவாசனுக்கு தகவல் கூறினார். அவரது புகாரில் குனியமுத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

