/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொழிலாளர் துறை எச்சரிக்கை
/
தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொழிலாளர் துறை எச்சரிக்கை
தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொழிலாளர் துறை எச்சரிக்கை
தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொழிலாளர் துறை எச்சரிக்கை
ADDED : மார் 20, 2025 05:34 AM
கோவை : வெளிமாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்யாமல், பணிக்கு அமர்த்துவது குற்றம் என, நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, கோவை, தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் காயத்திரி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து வெளிமாநில, புலம்பெயர்ந்த தொழிலாளர் விவரங்களை, https://labour.tn.gov.in/ism என்ற இணையதளத்தில், பதிவேற்ற வேண்டும்.
அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும், தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்று எண் மூலம், 'எம்ப்ளாயர் ரெஜிஸ்ட்ரேஷன்' பகுதியைக் கிளிக் செய்து, வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை, அதில் பதிவேற்ற வேண்டும்.
தொழிலாளர் துறை அலுவலகத்தை, தொழிலாளர்களின் ஆதார் நகலுடன் நேரில் அணுகியும் பதிவு செய்யலாம். வெளிமாநில தொழிலாளர் விவரங்களை, மார்ச் இறுதிக்குள் முழுமையாக பதிவேற்றம் செய்யாமல், அவர்களைப் பணிக்கு அமர்த்துவது குற்றமாகும்.
பெயர்ப் பலகை
அனைத்து நிறுவனங்களில், பெயர்ப் பலகைகள் தமிழில் முதலிலும், பிறகு ஆங்கிலம், பின் அவரவர் விரும்பும் பிற மொழிகள் என, 5:3:2 என்ற விகிதத்தில் அமைக்கப்பட வேண்டும்.
இந்த விதியைப் பின்பற்றாத 18 நிறுவனங்களின் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடையளவு சட்ட விதிமுறைகளை மீறிய, 9 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு தொழிலாளர் நல சட்டங்களை மீறிய, 128 நிறுவனங்கள் மீது வழக்கு என, இம்மாதம் மொத்தம் 197 நிறுவனங்கள் மீது, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிப்., மாதத்தில், 14 வயதுக்கு உட்பட்ட மற்றும் வளரிளம் பருவத்தினரை, அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பான 2 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருக்கை வசதி வேண்டும்
'கடைகளில், நின்று கொண்டே பணிபுரியும் பணியாளர்கள், பணிக்கு இடையே அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, அமர்வதற்கு ஏதுவாக நிறுவன வளாகத்தில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டதில், 8 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.