/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ கல்லுாரி வளாகத்தில் ஆய்வகம்; கிடைத்தது ஒப்புதல்
/
மருத்துவ கல்லுாரி வளாகத்தில் ஆய்வகம்; கிடைத்தது ஒப்புதல்
மருத்துவ கல்லுாரி வளாகத்தில் ஆய்வகம்; கிடைத்தது ஒப்புதல்
மருத்துவ கல்லுாரி வளாகத்தில் ஆய்வகம்; கிடைத்தது ஒப்புதல்
ADDED : நவ 09, 2025 11:25 PM
கோவை: மருந்து கட்டுப்பாட்டு துறையின் கீழ், மருத்துவ உபகரணங்களுக்கான தர பரிசோதனை ஆய்வகம் அமைக்க, மருத்துவ கல்வி இயக்குனரம் ஒப்புதல் அளித்துள்ளது.
மருந்துகளின் தரம் ஆய்வு செய்வது போல், பல்வேறு மருத்துவ பயன்பாட்டுக்கான உபகரணங்களின் தரமும் உறுதி செய்யப்படுகிறது. அதற்கான ஆய்வகம், தற்போது வரை தமிழகத்தில் இல்லை. முதன்முறையாக கோவையில் 20 ஆயிரம் சதுரடியில், மருத்துவ உபகரணங்கள் ஆய்வகம், ரூ.29.67 கோடியில் அமையவுள்ளது.
இந்த ஆய்வகத்திற்கான இடம் தேர்வு செய்வதில், நீண்ட இழுபறி நிலவியது. கோவை அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், இடம் தேர்வு செய்து, ஒப்புதலுக்கு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது.
கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் மாரிமுத்துவிடம் கேட்டபோது, '' மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் இருந்து ஒப்புதல் பெறப்பட்டு இடம், இறுதி செய்யப்பட்டுள்ளது. நிதி முன்பே தயார்நிலையில் இருப்பதால், பொதுப்பணித்துறையினர் ஆய்வுக்குப் பின் கட்டட வரைபடம் தயார் செய்து, ஒப்பந்தம் கோரப்படும். விரைவில் கட்டுமான பணிகள் துவங்கப்படும்,'' என்றார்.

