/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமி பலாத்காரம்; தொழிலாளி கைது
/
சிறுமி பலாத்காரம்; தொழிலாளி கைது
ADDED : செப் 18, 2024 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பீகார் மாநில தொழிலாளியை போக்சோ பிரிவில், மகளிர் போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விகாஸ்குமார்,26. இவர், நெகமம் அருகே ஒரு மில்லில் வேலை செய்து வந்தார். இவர், அதே மாநிலத்தை சேர்ந்த, 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
கடந்த, நான்கு நாட்களாக, வாந்தி எடுத்த சிறுமி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த போது, சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த, பொள்ளாச்சி மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் விகாஸ்குமாரை கைது செய்தனர்.