ADDED : செப் 27, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ளது இஞ்சிப்பாறை எஸ்டேட் மேல்பிரட்டை சேர்ந்தவர் கிளிண்டன்,32. இவர் நேற்று முன் தினம் அதிகாலை, 5:30 மணிக்கு தொழிற்சாலைக்கு பணிக்கு செல்ல நடந்து சென்றார். அப்போது தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த கரடி அவரை பின் தொடர்ந்து தாக்கியது.
இதில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. பின் அவர் எஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ஆறுதல் கூறிய பின், கரடி நடமாடிய பகுதியை நேரில் ஆய்வு செய்தனர்.
