ADDED : ஆக 24, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை அருகே மின் கசிவினால் எஸ்டேட் தொழிலாளியின் வீடு தீயில் கருகியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வால்பாறை அடுத்துள்ளது லோயர்பாரளை எஸ்டேட்டை சேர்ந்தவர் ராமர். எஸ்டேட் தொழிலாளியான இவர், நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மதிய நேரத்தில் வீட்டில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. வீடு திடீரென தீ பற்றி எரிந்தது.
தகவல் அறிந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர்(பொ) செந்தில்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் தொழிலாளியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகின. இது குறித்து, வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
