/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை-சத்தி புறவழிச்சாலைக்கு நிலம் கையகம்! ஊராட்சி அலுவலகங்களில் அறிவிப்பு
/
கோவை-சத்தி புறவழிச்சாலைக்கு நிலம் கையகம்! ஊராட்சி அலுவலகங்களில் அறிவிப்பு
கோவை-சத்தி புறவழிச்சாலைக்கு நிலம் கையகம்! ஊராட்சி அலுவலகங்களில் அறிவிப்பு
கோவை-சத்தி புறவழிச்சாலைக்கு நிலம் கையகம்! ஊராட்சி அலுவலகங்களில் அறிவிப்பு
ADDED : மார் 14, 2025 11:12 PM
அன்னுார்: புறவழிச் சாலைக்காக, நிலம் கையகப்படுத்துவது குறித்த அறிவிப்பு ஊராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டது.
கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், புறவழிச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குரும்பபாளையத்தில் துவங்கி, ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2.5 கி.மீ., தள்ளி அதற்கு இணையாக புறவழிச்சாலை அமைய உள்ளது.
கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி வழியாக, கர்நாடக எல்லை வரை, புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த, கடந்த மாதம் 22ம் தேதி அரசிதழில் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவிப்பு வெளியானது.
காட்டம்பட்டி, கரியாம்பாளையம், ஒட்டர்பாளையம், அன்னுார், அ.மேட்டுப்பாளையம், பசூர், ஆம்போதி உள்ளிட்ட ஊராட்சிகளின் வழியாக சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதிகளின் விபரம் அடங்கிய அறிவிப்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் வெளியிடும்படி நெடுஞ்சாலைத்துறை (நில எடுப்பு) தாசில்தார் சிவக்குமார், அன்னுார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நேற்று காட்டம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களின் புல எண்கள் அடங்கிய நோட்டீஸ் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
'அறிவிப்பு வெளியானதிலிருந்து, 21 நாட்களுக்குள் ஆட்சேபனைகளை கோவையில் உள்ள நிலம் கையகப்படுத்தலுக்கான மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்,' என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.