/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விறுவிறு
/
நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விறுவிறு
நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விறுவிறு
நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விறுவிறு
ADDED : ஏப் 09, 2025 10:34 PM

அன்னுார்; நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி விறுவிறுப்படைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து, கருவலூர், அன்னுார், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையத்திற்கு தினமும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்கள் இந்த பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றன. விடுமுறை நாட்களில் மிக அதிக அளவில் போக்குவரத்து உள்ளது. எனவே இந்த பாதையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக டெண்டர் விடப்பட்டு தற்போது பணி துவங்கியுள்ளது. இந்நிலையில் அன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாதையில் பெள்ளேபாளையம் ஊராட்சி உள்பட சில ஊராட்சிகளில் தற்போது உள்ள நிலம் நான்கு வழி சாலை ஆக விரிவாக்கம் செய்ய போதுமானதாக இல்லை.
எனவே நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்த அன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாதையில் உள்ள கிராம ஊராட்சிகளை சேர்ந்த சில நில உடைமைதாரர்களுக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது.
'இதை அடுத்து நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்ததும் அன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை பணி வேகம் பெறும்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.