தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மண் சரிவு ஏற்பட்ட மலைப்பாதை சீரமைப்பு: மெல்ல திரும்புது இயல்பு நிலை

மண் சரிவு ஏற்பட்ட மலைப்பாதை சீரமைப்பு: மெல்ல திரும்புது இயல்பு நிலை

மண் சரிவு ஏற்பட்ட மலைப்பாதை சீரமைப்பு: மெல்ல திரும்புது இயல்பு நிலை


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 06:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை மலைப்பாதையில் மண் சரிந்து, பாறை உருண்ட இடத்தில் தற்காலிகமாக ரோடு சீரமைக்கப்பட்டதால், வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

ஆழியாறில் இருந்து வால்பாறை வரை மொத்தம், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்நிலையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே, நேற்று முன்தினம் இரவு திடீர் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. இதனால், 16 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகனகுமார் தலைமையில், மண் சரிவு அகற்றப்பட்டது. நேற்று காலை ரோடு சீரமைக்கும் பணி நிறைவடைந்த பின், வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதனால் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

வால்பாறை – ஆழியாறு வரை மொத்தம், 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இதில், அட்டகட்டியில் இருந்து ஆழியாறு வரையிலான மலைப்பாதையில மட்டும், 16 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இப்பகுதி முழுவதும் பாறைகள் நிறைந்துள்ளதால், எந்த நேரத்திலும் ரோட்டில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, மலைப்பாதையில் பயணம் செய்வோர், தங்களது வாகனங்ளை ஆபத்து நிறைந்த கொண்டைஊசி வளைவுகளுக்கு இடையே நிறுத்தி வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் பிரதீப் கூறியதாவது:

மலைப்பாதையில் போக்குவரத்து தடைபடக்கூடாது என்பதற்காக, மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சாலையில் தடுப்புக்கம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்தப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்தால் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, மலைப்பாதையில் இயக்கப்படும் வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் இந்த வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். மழைக்கு பின் ரோட்டில் தடுப்புச்சுவர் கட்டும் பணி துவங்கப்படும்.

இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us