UPDATED : ஜூலை 25, 2026 07:15 PM
ADDED : ஜூலை 25, 2026 07:11 PM
கோவை: கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில், 17ம் தேதி முதல் நடந்து வரும் புத்தகத் திருவிழா, ஜூலை 26 நிறைவடைகிறது. காலை 10.00 முதல் இரவு 8.00 மணி வரை நடக்கும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.
3 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பல ஆங்கில மற்றும் பழமையான புத்தகங்கள் ரூ.99 முதல் 50 சதவீத தள்ளுபடியில் கிடைக்கின்றன.
கண்காட்சியின் 'ஏ' அரங்கின், 117 வது ஸ்டாலில் 'தினமலர்' இடம் பெற்றுள்ளது. இங்கு 'தினமலர்' நாளிதழுக்கு சந்தா செலுத்துவோருக்கு, சிறப்பு சலுகையாக புத்தகங்களில் விலையில் தள்ளுபடியும் கிடைக்கும். சந்தாவின் பயனாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் விபத்து காப்பீடும் பெறலாம்.
கண்காட்சியில் ஜூலை 26 காலை 11 மணிக்கு, ஜல்லிக்கட்டு, சுற்றுச்சூழல் நுால்கள் திறனாய்வு நடக்கிறது. மாலை 4 மணிக்கு மகிழ்வுரை மன்றம் நகைச்சுவை நிகழ்வு, புலவர் சாந்தாமணி தலைமையில் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பாரத் கலா சங்கமம் சிறப்பு இசை நிகழ்ச்சி நடக்கிறது.
