ADDED : ஆக 17, 2026 09:03 PM
அ நிறம் | அளவு
வடவள்ளி: தனியார் கல்லுாரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முறையான நீதி வழங்க வேண்டும் என, கோவை அரசு சட்டக்கல்லூரி வளாகத்தின் முன்பு, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாணவன் அமுதன் படுகொலை தொடர்பான விசாரணையை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும், வழக்கை திசை திருப்புவதோ, அரசியலாக்குவதையோ தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
மாணவரின் பாதுகாப்புக்கு தவறிய, கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் போதை பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
