/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்டக்கல்லுாரி முன்னாள் மாணவர் மன்ற வெள்ளி விழா
/
சட்டக்கல்லுாரி முன்னாள் மாணவர் மன்ற வெள்ளி விழா
ADDED : செப் 30, 2025 11:06 PM
கோவை; சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லுாரியில் பயின்று, கோவையில் வக்கீலாக பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் மன்றத்தின், 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி, கோவையில் நடந்தது.
அதில், ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார் பேசுகையில், ''ஐகோர்ட் நீதிபதியாக பதவியேற்றபோது, ஐந்து பேருக்கு நன்றி தெரிவித்தேன்.
முதலில், நான் நீதிபதியாக முழு காரணமாக இருந்தவர் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதியரசர் ராமசுப்பிரமணியம். நீதிபதியாக காரணமாக இருந்த, நான் பயின்ற சென்ட்ரல் சட்டக்கல்லுாரி நிர்வாகத்துக்கும் நன்றி,'' என்றார்.
நிகழ்ச்சியில், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா, சென்ட்ரல் சட்டக்கல்லுாரி சேர்மன் சரவணன், பார் கவுன்சில் இணை தலைவர் அருணாச்சலம், மூத்த வக்கீல் சுந்தரவடிவேலு, பார் கவுன்சில் உறுப்பினர் கதிரவன் மற்றும் பலர் பேசினர்.
சென்ட்ரல் சட்டக்கல்லுாரியில் பயின்று, 30 ஆண்டுக்கு மேல் வக்கீலாக பணியாற்றுவோர் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் மத்திய சட்ட அறக்கட்டளை துவங்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.