/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2025 09:51 PM

கோவை; மதுரை வக்கீல் வாஞ்சிநாதன், ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் மீது சுப்ரீம் கோா்ட் தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பினார். அது சமூக ஊடகத்தில் பகிரபட்டது.
இதனால், கடிதம் எழுதிய வக்கீல் மீது நீதிபதிகள் சுவாமிநாதன், ராஜசேகர் அடங்கிய பெஞ்ச், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.
அதை கைவிடக்கோரி கோவை வக்கீல் சங்கம் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார், வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பார் கவுன்சில் துணை தலைவர் அருணாச்சலம், வக்கீல் சங்க செயலாளர் சுதீஷ் பங்கேற்றனர்.
தன் மீதான குற்றச்சாட்டை, தானே நீதிபதியாக இருந்து விசாரிப்பது நியாயமான வழிமுறை அல்ல. வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை கைவிட வேண்டும், என நந்தகுமார் கூறினார்.