/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு; வழக்கு விசாரணை பாதிப்பு
/
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு; வழக்கு விசாரணை பாதிப்பு
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு; வழக்கு விசாரணை பாதிப்பு
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு; வழக்கு விசாரணை பாதிப்பு
ADDED : நவ 21, 2024 09:46 PM
கோவை ; வக்கீல்கள் தொடர்ந்து கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வக்கீலாக பணியாற்றி வருபவர் கண்ணன்,30. இவர், வக்கீல் குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவி வக்கீல் சத்யவதியிடம், பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், ஓசூர் கோர்ட் வளாகம் அருகில் கண்ணன் நடந்து சென்ற போது சரமாரியாக அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண்ணன் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வக்கீல் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரியும் தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கோவையிலும் அனைத்து நீதிமன்றங்களை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்றும் தொடர்ந்து புறக்கணிக்கின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, கடந்த திங்கள் கிழமை, வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.
கடந்த 11 ம் தேதி, கன்னியாகுமரியில் வக்கீல் கிறிஸ்டோபர் என்பவர் கொலை சம்பவம் கண்டித்து கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். இரண்டு வாரத்தில் நான்கு நாட்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.