/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
/
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : பிப் 19, 2025 10:13 PM
அன்னுார் ; அன்னுாரில் வக்கீல்கள் புறக்கணிப்பால், கோர்ட்டில் பணிகள் பாதிக்கப்பட்டன.
2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, ஒவ்வொரு ஆண்டும் பிப். 19ஆம் தேதி கருப்பு தினமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் அனுசரிக்கப்படுகிறது. அன்று கோர்ட் புறக்கணிப்பு செய்யப்படுகிறது. அதன்படி நேற்று அன்னுார் கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் கோர்ட்டில் பணிகள் பாதிக்கப்பட்டது. அன்னுார் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'மத்திய, மாநில அரசுகள் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசின் புதிய வக்கீல்கள் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்தார்.

