UPDATED : அக் 12, 2026 08:11 PM
ADDED : அக் 12, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்–அன்னூர் நால்ரோடு அருகே, திருப்பூர் 2-வது குடிநீர் திட்டக் குழாயில் திடீரென நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படும் குடிநீர் சாலையில் தேங்கி வீணாகி வருகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தொடர்ந்து, கசிவுகளை சரிசெய்து வந்தாலும், அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் பைப்லைன்கள் உடைந்து தண்ணீர் கசிந்து கொண்டே இருப்பது தொடர் கதையாகி வருகிறது.இதற்கு பழமையான பைப்லைன்களே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய இளநிலை பொறியாளர் அன்பரசு கூறுகையில், குடிநீர் குழாய்களில் ஏற்படும் லீக்கேஜ்களை நாங்கள் உடனடியாக சரிசெய்து வருகிறோம் என்றார்.
