/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ப்பு நாயை கொன்ற சிறுத்தை
/
வளர்ப்பு நாயை கொன்ற சிறுத்தை
ADDED : டிச 26, 2025 06:37 AM
வால்பாறை: வால்பாறையில், நேற்று முன்தினம் இரவு நகைக்கடை வீதி வழியாக புதுமார்க்கெட் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, துாய்மை பணியாளர் பெரியம்மா என்பவரின் வீட்டு வாசலில் வளர்ப்பு நாயை கடித்து கொன்றது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக, இரவு நேரத்தில் நகைக்கடை வீதி வழியாக வரும் சிறுத்தை புதுமார்க்கெட், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, அச்சுறுத்தி வருகிறது.
அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும்,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'சிறுத்தை நடமாடும் பகுதியில் இறைச்சி மற்றும் கோழிக்கழிவுகளை கொட்டக்கூடாது.
வீடுகளில் சிறுத்தைக்கு பிடித்தமான கோழி, ஆடு, நாய்களை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். நள்ளிரவில் தேவையில்லாமல் வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

