/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓதிமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்; விவசாயிகள் அச்சம்
/
ஓதிமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்; விவசாயிகள் அச்சம்
ஓதிமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்; விவசாயிகள் அச்சம்
ஓதிமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்; விவசாயிகள் அச்சம்
ADDED : டிச 15, 2025 05:12 AM
மேட்டுப்பாளையம்: பெத்திக்குட்டை, ஓதிமலை பகுதிகளில், சிறுத்தைகள் நடமாட்டத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
சிறுமுகையை அடுத்த பெத்திக்குட்டை அருகே ஓதிமலை, ரங்கம்பாளையம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்பு மற்றும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இந்தப் பகுதிகளில் தற்போது சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதை விவசாயிகள் பார்த்துள்ளனர்.
இது குறித்து ரங்கம்பாளையம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஓதிமலை அடிவாரப் பகுதிகளில், ஆடுகளை விவசாயிகள், பொதுமக்கள் மேய்த்து வருகின்றனர்.
இதில் சில ஆடுகள் காணாமல் போயின. ஒரு முறை அய்யம்பாளையம் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை, சிறுத்தை பிடித்து சென்றதை பார்த்துள்ளனர். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.ஓதிமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், ஓதி மலை கோவிலுக்கு செல்லும் அடிவார கேட், வழக்கமாக அதிகாலை, 5:00 மணிக்கு திறப்பதற்கு பதிலாக, 6:30 மணிக்கு மலைக்கு செல்லும் நுழைவு கேட்டை திறக்கின்றனர்.
இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினரிடம் புகார் செய்தோம். அவர்கள் சண்முகாபுரத்தில் சிறுத்தைகளை பிடிக்க, கூண்டு வைத்துள்ளனர். ஆனால் சிறுத்தை கூண்டு வைத்த பிறகு இப்பகுதிக்கு வரவில்லை. அதனால் நடமாட்டம் உள்ள ஐய்யம்பாளையம், ரங்கம்பாளையம் கள்ளிப்பட்டி மலைப்பகுதி ஆகிய பகுதிகளில் சிறுத்தை பிடிக்க கூண்டுகளை வைக்க வேண்டும். சிறுத்தை மற்றும் மனித மோதல்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக, இப்பகுதியில் நடமாடும் சிறுத்தைகளை, சிறுமுகை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

