/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னதடாகத்தில் சிறுத்தை நடமாட்டம்
/
சின்னதடாகத்தில் சிறுத்தை நடமாட்டம்
ADDED : டிச 25, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: சின்னதடாகத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் அறிவித்துள்ளனர். அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், '
சின்ன தடாகம் வடக்கு பகுதியில், மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்லும் வழியில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவரின் ஆட்டை சிறுத்தை கவ்வி பிடித்தது. அங்கு இருந்தவர்கள் சத்தமிட்டதால், ஆட்டை விட்டு விட்டு தப்பியது. சின்னதடாகம் வடக்கு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்றனர்.

