/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வானம் கொட்டட்டும்; இனி 5 நாள் மழை
/
வானம் கொட்டட்டும்; இனி 5 நாள் மழை
ADDED : நவ 13, 2024 05:27 AM

கோவை : இன்று முதல் வரும் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என, கோவை, வேளாண் பல்கலையின், வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் முன்கூட்டியே துவங்கிய வடகிழக்குப் பருவமழை, தமிழகம் முழுதும் பரவலாக பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில், இன்று முதல் வரும் 17ம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பைப் பொறுத்தவரை, லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஓரிரு இடங்களில் 2 மி.மீ., மழை பெய்யக்கூடும்.
நாளை, ஆனைமலை, அன்னுார், காரமடை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு, சர்க்கார் சாமக்குளம், சுல்தான்பேட்டை, சூலூர், தொண்டாமுத்தூர் பகுதிகளில், சராசரியாக 7 முதல் 9 மி.மீ, மழை பதிவாகலாம்.
வரும் 15ம் தேதி, குறைந்தது 20 மி.மீ., முதல் அதிகபட்சம் 24 மி.மீ., வரை மழை பெய்யலாம். வரும் 16ம் தேதி, குறைந்தபட்சம் 18 மி.மீ., அதிகபட்சம் 22 மி.மீ., மழை எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 17ம் தேதி, குறைந்தபட்சம் 18 மி.மீ., மழையும், அதிகபட்சம் 25 மி.மீ., மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

