/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோலமிட்டு கொண்டாடுவோம் வாங்க! 'தினமலர்' நாளிதழ் கோவை மக்களுக்கு அழைப்பு
/
கோலமிட்டு கொண்டாடுவோம் வாங்க! 'தினமலர்' நாளிதழ் கோவை மக்களுக்கு அழைப்பு
கோலமிட்டு கொண்டாடுவோம் வாங்க! 'தினமலர்' நாளிதழ் கோவை மக்களுக்கு அழைப்பு
கோலமிட்டு கொண்டாடுவோம் வாங்க! 'தினமலர்' நாளிதழ் கோவை மக்களுக்கு அழைப்பு
ADDED : நவ 20, 2024 10:49 PM

கோவை; சிறுவாணி ஆறும், சில்லுன்னு வீசுற காத்து மட்டும் கோவைக்கு சொந்தமில்லீங்க.
நம்ம ஊரு மண்ணும், அதுல போடுற அம்மணிகளோட பூக்கோலத்துக்கும் கூட மணமிருக்குங்கோ. தேரடி வீதிகளை, திருவிழா கோலங்களால் அலங்கரிக்க, ஒரு வாய்ப்பு கொடுக்குது தினமலர் நாளிதழ்.வணக்கமுங்கோ! நம்ம ஊரு கோயமுத்துாருல திருவிழாங்கோ...
சென்னை, மதுரை, நெல்லை தமிழுக்கு உள்ள வாசம் போல், கொங்கு தமிழ் பேச்சை கேட்டாலே, இன்ப தேன் வந்து பாயும் காதினிலே.பேச்சு மட்டும் இல்லிங்கோ, இந்த மண்ணுக்கும் ஒரு தனித்துவம் இருக்குங்கோ.
கொங்கு மண்டலத்தின் தலைநகரம் கோவைக்கு என, பாரம்பரிய கலாசார பின்னணி உள்ளது.ரேக்ளா, அரிசி பருப்பு சாதம், சிறுவாணி தண்ணீர், நொய்யல், ஜவுளி, பேரூர் கோவில், மருத மலை, தங்க நகை தொழில் இப்படி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு விஷயங்களை கொண்டுள்ளது கோவை.
கோவையின் கலாசாரத்தை இன்றைய இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல கோவை விழா நடத்தப்படுகிறது.
விழாவின், 17வது பதிப்பை முன்னிட்டு, நவ., 23 முதல் டிச., 1 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
வரும், 23ம் தேதி மாலை, கொடிசியா மைதானத்தில், பாடகி ஜொனிடா இசை நிகழ்ச்சியுடன் கோவை விழா துவங்க உள்ளது. மராத்தான், கலாசார அணிவகுப்பு, பாரா விளையாட்டு போட்டிகள், உணவுத் திருவிழா என, பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.கோவை விழாவை முன்னிட்டு, வரும், 23ம் தேதி 'தினமலர்' நாளிதழ் கோவை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 'சின்ன விசயங்தாங்க.
ஆனால், நீங்க செஞ்சா அது ரொம்ப பெரிய விசயமாயிருமுங்க,''பெருசா ஒன்னும் இல்லிங்கோ, கோவை விழாவை வரவேற்கும் விதமாக, வரும், 23ம் தேதி மாலை உங்க வீட்டு வாசலில் அழகா கோலம் போட்டு, அது நடுவுல விளக்கேத்தனுமுங்க, அவ்வளவுதாங்க.
ஊரே கூடி விளக்கேத்துனா, ஜம்முன்னு இருக்குமுங்க. விளக்கு ஏற்றுவதோடு, அதை அப்படியே ஒரு படம் பிடிச்சு, 95666 97267 என்ற எங்க டெலிகிராம் எண்ணுக்கு அனுப்பி வைக்க மறந்துராதீங்க. விளக்கேத்துவோம்... கோவையின் பெருமையை கொண்டாடுவோமுங்க!

