/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போகிக்கு முன் நம் நகரையும் ஜோராக சுத்தம் செய்யலாம்!
/
போகிக்கு முன் நம் நகரையும் ஜோராக சுத்தம் செய்யலாம்!
போகிக்கு முன் நம் நகரையும் ஜோராக சுத்தம் செய்யலாம்!
போகிக்கு முன் நம் நகரையும் ஜோராக சுத்தம் செய்யலாம்!
ADDED : ஜன 07, 2026 05:12 AM

கோவை: போகிப் பண்டிகை நெருங்குகிறது. வீட்டில் தேவையற்ற குப்பையை அகற்றி, பொலிவாக்குகிறோம். அதைப்போலவே நகரிலும் ஆங்காங்கு தேவையில்லாத பொருட்கள், முறையாக பராமரிக்கப்படாத பொருட்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றன.
அவற்றை சம்பந்தப்பட்ட துறையினர், தனியார் நிர்வாகங்கள் தாமாக முன்வந்து அகற்றலாம். அல்லது மாநகராட்சி நிர்வாகம் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி அவகாசம் கொடுத்து அகற்றச் சொல்லலாம். அகற்றாத நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கலாம்.
உதாரணமாக, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கேபிள்கள் நகரெங்கும் குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டுள்ளன. அவை பழுதடைந்தால், அகற்றாமல் அங்கேயே துண்டித்து போட்டுவிட்டு, புதிது மாற்றுகின்றனர். பழைய கேபிள்கள் அங்கேயே பொதுமக்களுக்கு இடையூறாக கிடக்கின்றன.
மாநகராட்சி எல்லைக்குள் பெரும்பாலும் குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்டு விட்டதால், குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில், குப்பையை குவித்து விடுகின்றனர். இந்த குப்பையையும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றலாம்.
டூவீலர் மெக்கானிக் கடைகளின் முன்புறம் நிறுத்தப்பட்டிருக்கும் தேவையற்ற வாகனங்களையும் அகற்றிக்கொள்ள, உரிய அறிவுறுத்தல்களை வழங்கலாம்.
போகிப் பண்டிகைக்கு வீடு மட்டுமல்லாது, நகரையும் சுத்தப்படுத்தலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

