/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதியை கடைபிடிப்போம் விபத்துகளை தடுப்போம் !
/
விதியை கடைபிடிப்போம் விபத்துகளை தடுப்போம் !
ADDED : ஜன 29, 2024 11:23 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை, சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா துவக்கி வைத்து பேசுகையில், ''தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகளவு உள்ளதால் விபத்துகள் நடக்கிறது. எனவே, சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிப்பதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும்.
தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுதல், காரில் செல்லும் போது 'சீட் பெல்ட்' அணிந்து செல்லுதல் என போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மாணவ, மாணவியர் ரோட்டில் நடந்து செல்லும் போதும், கடக்கும் போதும் கவனமாக செல்ல வேண்டும்,'' என்றார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் கேசவகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியானது, பாலக்காடு ரோடு, பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை வழியாக சென்று, மகாலிங்கபுரம் ஆர்ச் அருகே நிறைவடைந்தது. மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.