/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நலம் பேச இணைவோம்! இணையவழியில் நாளை நடக்கிறது
/
நலம் பேச இணைவோம்! இணையவழியில் நாளை நடக்கிறது
ADDED : ஆக 25, 2025 12:15 AM
கோவை; இன்றைய காலகட்டத்தில் வாழ்வியல் மாற்றங்களால் அதிகரித்து வரும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம். நம் குழந்தைகளை ஆபத்தான நோயின் பிடியில் சிக்காமல் ஆரோக்கியமான எதிர்காலத்தை கொடுக்க உதவும் இணையவழி கலந்துரையாடல் நாளை நடக்கிறது.
'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர், மருத்துவமனை இணைந்து 'நலம் பேசுவோம்- நலமுடன் வாழ்வோம்' என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்வை நடத்துகிறது. நாளை காலை, 11:00 மணி முதல் 12:00 மணி வரை நடக்கும்.
இந்நிகழ்வில், கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் சுப்ரமணியம், மருந்தியல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் விக்னேஷ் கந்தகுமார், ரத்த புற்றுநோய் நிபுணர் ராஜசேகர் ஆகியோர் பங்கேற்று கேள்விகளுக்கு விளக்கமளிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் இணைய, www.dmrnxt.in/nalam எனும் இணையதளம் வாயிலாக நடைபெறும். முன்பதிவு செய்யவும், புற்றுநோய் சார்ந்த உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை 87549-87509 என்ற எண்ணிற்கு இன்று இரவுக்குள் அனுப்பவேண்டும்.