/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகளுடன் இசைந்து வாழ்வோம்! தெருக்கூத்து வாயிலாக விழிப்புணர்வு
/
வனவிலங்குகளுடன் இசைந்து வாழ்வோம்! தெருக்கூத்து வாயிலாக விழிப்புணர்வு
வனவிலங்குகளுடன் இசைந்து வாழ்வோம்! தெருக்கூத்து வாயிலாக விழிப்புணர்வு
வனவிலங்குகளுடன் இசைந்து வாழ்வோம்! தெருக்கூத்து வாயிலாக விழிப்புணர்வு
ADDED : டிச 10, 2024 11:39 PM

வால்பாறை; வால்பாறை அருகே, மனித --- வனவிலங்கு மோதல் தடுப்பு குறித்து, தொழிலாளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், சமீப காலமாக வனவிலங்கு - மனித மோதல் அதிகரித்துள்ளது. இதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை இயற்கை பாதுகாப்பு மையத்தின் சார்பில், பச்சமலை, ஊசிமலை, முருகாளி, ேஷக்கல்முடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்டில், மனித -- வனவிலங்கு இசைந்து வாழ்தல் குறித்து தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது.
எஸ்டேட் மேலாளர்கள் தலைமையில் நடந்த நிகழ்ச்சியை, வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கணேஷ் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சில், வனவிலங்குகளை யாரும் துன்புறுத்த கூடாது. யானைகளுக்கு பிடித்தமான வாழை, பலா, கொய்யா போன்றவைகளை குடியிருப்பில் பயிரிடக்கூடாது. அதே போல் சிறுத்தைக்கு பிடித்தமான நாய், ஆடு, மாடு, கோழிகளை குடியிருப்பில் வளர்க்ககூடாது. திறந்த வெளியில் மாமிசக்கழிவுகளை வீசக்கூடாது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வால்பாறையில் இரவு நேரங்களில் தொழிலாளர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில், தொழிலாளர்கள் தேயிலை பறிக்க செல்லக்கூடாது.
வனவிலங்குகளால் தான் இயற்கை பாதுகாப்பாக உள்ளது. வனவிலங்குகளை துன்புறுத்தாமல், அவற்றுடன் இணைந்து வாழ்வோம் என்று, தெருக்கூத்து நிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், வனத்துறை அதிகாரிகள், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள், எஸ்டேட் அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.