/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை வளம் கொள்ளை போக... இனி விடக்கூடாது ! வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு
/
இயற்கை வளம் கொள்ளை போக... இனி விடக்கூடாது ! வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு
இயற்கை வளம் கொள்ளை போக... இனி விடக்கூடாது ! வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு
இயற்கை வளம் கொள்ளை போக... இனி விடக்கூடாது ! வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு
UPDATED : மார் 02, 2024 01:49 AM
ADDED : மார் 01, 2024 11:54 PM

தொண்டாமுத்தூர்:தினமலர் செய்தி எதிரொலியாக, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சட்ட விரோதமாக, மண் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களில், கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கோவை மாவட்டத்தின், மேற்கு புறநகர் பகுதியான தொண்டாமுத்தூர் வட்டாரப் பகுதி மூன்று திசைகளிலும் மேற்கு தொடர்ச்சி மலையை அரணாக கொண்டுள்ள இயற்கை வளம் மிகுந்த பகுதியாகும். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வெள்ளெருக்கம்பாளையம், வெள்ளிமலைபட்டிணம், பட்டியார் கோவில்பதி, வடிவேலம்பாளையம், காளிமங்கலம், குப்பனூர், கரடிமடை உள்ளிட்ட பகுதிகளில், மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள பட்டா நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கிராவல் மண் மற்றும் செம்மண்ணை, வெட்டி எடுத்து, லாரிகளில் இரவும், பகலுமாக கோவையின் பல பகுதிகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை தடுக்க வேண்டிய கனிமவளத்துறை, வருவாய்த்துறை, போலீசார் என, அனைத்து துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, நேற்று நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, வெள்ளருக்கம்பாளையத்தில் அனுமதியின்றி மண் வெட்டி எடுக்கப்பட்ட இடத்தில், கனிமவளத்துறை உதவி இயக்குனர் பிரசாத், வி.ஏ.ஓ., பழனி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
கனிமவளத்துறை உதவிய இயக்குனர் பிரசாந்திடம் கேட்டபோது, மண் வெட்டி எடுக்கப்பட்டது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. எவ்வளவு மண் எடுக்கப்பட்டுள்ளது என, அளவீடு செய்யப்பட்டுள்ளது. உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும், என்றார்.
இத்தனை நாட்கள், கண்டுகொள்ளாமல் இருந்ததை போல, இப்போதும் பெயரளவிற்கு மட்டும் நடவடிக்கை எடுக்காமல், மண் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

