/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சிப்காட்' தொழிற்சாலைக்கு எதிராக விவசாயிகளுக்கு துணை நிற்போம்!
/
'சிப்காட்' தொழிற்சாலைக்கு எதிராக விவசாயிகளுக்கு துணை நிற்போம்!
'சிப்காட்' தொழிற்சாலைக்கு எதிராக விவசாயிகளுக்கு துணை நிற்போம்!
'சிப்காட்' தொழிற்சாலைக்கு எதிராக விவசாயிகளுக்கு துணை நிற்போம்!
ADDED : டிச 20, 2024 10:44 PM
நெகமம்; நெகமம், கப்பளாங்கரை ஊராட்சி கோப்பனூர்புதூரில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
நெகமம், கப்பளாங்கரை ஊராட்சி கோப்பனூர்புதூரில் கான்கிரீட் சாலை அமைத்தல், அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் அமைத்தல் ஆகியவற்றிற்கு பூமி பூஜை நடைபெற்றது. விழாவில், பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் தலைமை தாங்கி, பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய குழு துணை தலைவர் துரைசாமி, கப்பளாங்கரை ஊராட்சி தலைவர் தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று, ஜக்கார்பாளையம், காட்டம்பட்டி, மெட்டுவாவி, குருநல்லிபாளையம் கிராமத்தில் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
மெட்டுவாவி மற்றும் சுற்றுப்பகுதியில் அதிகளவு பந்தல் காய்கறிகள் மற்றும் தென்னை விவசாயம் உள்ளது. நீர் வளம் மற்றும் நிலவளம் நன்றாக உள்ளது. இப்பகுதியில் திடீரென்று 'சிப்காட்' தொழிற்சாலை அமைக்க அரசு சார்பில், நில அளவீடு பணி நடந்துள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக அச்சமடைந்துள்ளனர். எனவே, திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
'சிப்காட்' தொழிற்சாலைக்கு எதிராக விவசாயிகளுக்கு துணை நிற்போம். இது சம்பந்தமாக, கோவை மாவட்டத்தில் உள்ள, 10 எம்.எல்.ஏ.,க்கள் விரைவில் ஒன்றிணைந்து இப்பகுதியில் போராட்டம் நடத்த இருக்கிறோம். இது மட்டுமின்றி மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சருக்கு மனு கொடுக்க இருக்கிறோம்.
இவ்வாறு, கூறினார்.