தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நடப்போம்; நலம் பெறுவோம்! திட்டத்துக்கு கிட்டுமா புத்துயிர்?

நடப்போம்; நலம் பெறுவோம்! திட்டத்துக்கு கிட்டுமா புத்துயிர்?

நடப்போம்; நலம் பெறுவோம்! திட்டத்துக்கு கிட்டுமா புத்துயிர்?

1


ADDED : ஆக 26, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 09:03 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரேஸ்கோர்ஸ்: தினமும் நடைபயிற்சி மேற்கொண்டால் நீரிழிவு, ரத்த அழுத்த நோய்கள், இதய நோய் தாக்கம் குறையும். சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக இருக்கவும், நாள்பட்ட உடல் பிரச்னைகள், மன அழுத்தத்தை குறைக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

நடைபயிற்சியின் அவசியத்தை மக்களிடம் சேர்ப்பிக்கும் வகையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற திட்டம் தி.மு.க. ஆட்சியில் துவக்கப்பட்டது.

ரேஸ்கோர்ஸ் ஈஸ்ட் கிளப் ரோட்டில் துவங்கி திருச்சி ரோடு – ஜி.ஹெச். சிக்னல் – வாலாங்குளம் முழு சுற்று – ஜி.ஹெச். சிக்னல் – திருச்சி ரோடு – வெஸ்ட் கிளப் ரோடு – ரேஸ்கோர்ஸ் முழு சுற்று – ஈஸ்ட் கிளப் ரோட்டில் முடிக்கும் வகையில், 8 கி.மீ. நடைபயிற்சி மேற்கொள்ள பாதை வகுக்கப்பட்டது. இவ்வழித்தடத்தில் எத்தனை கி.மீ. நடந்திருக்கிறார்கள் என்பதை அறியும் வகையில் ஆங்காங்கே போர்டுகள் வைக்கப்பட்டன.

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று நிகழ்ச்சி நடத்தப்படும். ஆரோக்கிய வாழ்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்; ஒவ்வொரு கி.மீ.,க்கு இயன்முறை டாக்டர், ஒரு தன்னார்வலர், சுகாதார பணியாளர் கொண்ட மருத்துவ உதவி மையம் செயல்படும் என அறிவித்தது. திட்டம் துவங்கியபோது இப்பாதை பயன்படுத்தப்பட்டது. சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை; மாவட்ட நிர்வாகமும் விட்டு விட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இத்திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் அக்கறை செலுத்தவில்லை. நினைவூட்டும் வகையில் ஆங்காங்கே போர்டுகள் மட்டும் தென்படுகின்றன. மக்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பயனுள்ள திட்டம் என்பதால், செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us