தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நூலகர் தின விழா

நூலகர் தின விழா

நூலகர் தின விழா


ADDED : ஆக 17, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இரண்டாவது கிளை நூலகத்தில், நூலகர் தின விழா நடந்தது.

இந்திய நூலகத் தந்தை டாக்டர் அரங்கநாதன் பிறந்த நாள், நூலகர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. மேட்டுப்பாளையம் 2வது கிளை நூலகத்தில், நூலகர் தின விழா நடந்தது.

வாசகர் வட்டாரத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். சரவணம்பட்டி கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைமை நூலகர் கணபதி, புத்தகங்கள் வாசிப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அச்சு, இணையவழி புத்தகங்களின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து பேசினார்.

விழாவில் நூலகர்கள் கவுசல்யா, கருப்புசாமி, சாலிவாகனன், ரமேஷ், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் பூபாலன் உட்பட வாசகர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us