/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியவருக்கு சேவை குறைபாடு இழப்பீடு வழங்க எல்.ஐ.சி.,க்கு உத்தரவு
/
முதியவருக்கு சேவை குறைபாடு இழப்பீடு வழங்க எல்.ஐ.சி.,க்கு உத்தரவு
முதியவருக்கு சேவை குறைபாடு இழப்பீடு வழங்க எல்.ஐ.சி.,க்கு உத்தரவு
முதியவருக்கு சேவை குறைபாடு இழப்பீடு வழங்க எல்.ஐ.சி.,க்கு உத்தரவு
ADDED : ஜன 16, 2025 03:42 AM
கோவை : முதியவருக்கு இழப்பீடு வழங்க, எல்.ஐ.சி.,க்கு, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை, வெள்ளியங்கிரி பகுதியை சேர்ந்த மகாலிங்கம்,83, இவரது மனைவி கூட்டாக சேர்ந்து, சென்னை அண்ணா நகரிலுள்ள எல்.ஐ.சி., கிளையில், 'ஜீவன் சரிதா'' என்ற பாலிசி எடுத்து இருந்தனர். 2001ல் மனைவி இறந்து விட்டதால், பாலிசி நிபந்தனை படி மாதந்தோறும், காப்பீட்டு தொகை, 500 ரூபாய் மகாலிங்கத்திற்கு வழங்கி வந்தனர்.
ஆனால், 2019 முதல் காப்பீட்டு தொகை வழங்காமல் நிறுத்தி விட்டனர். தொழில்நுட்ப பிரச்னையால் வங்கி கணக்கிற்கு பணம் வராமல் இருக்கலாம் என்று மகாலிங்கம் நினைத்தார். ஆனால், ஒரு வருடத்திற்கும் மேலாக பணம் வராததால், எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மகாலிங்கம், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எல்.ஐ.சி., சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.