/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் அபராதம் செலுத்தாவிடில் லைசன்ஸ் ரத்து!

ADDED : ஜன 28, 2025 11:51 PM

கோவை: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும், வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதம் செலுத்தவில்லை என்றால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தெரிவித்தார்.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநகரில் அத்திபாளையம் பிரிவு, காந்திபுரம், டவுன்ஹால், காமராஜபுரம் மற்றும் ஹோப் காலேஜ் ஆகிய ஐந்து இடங்களில், ஐ.டி.எம்.எஸ்., (நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபடும் போலீசாரும், விதிமீறும் வாகனங்களை தங்களின் மொபைல் போனில் (போலீஸ் இ-ஐ) படமெடுத்து, அபராதம் விதிக்கின்றனர்.
ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை உள்ளதால், பலர் பணம் செலுத்தாமல் உள்ளனர். சலான் விநியோகிக்கப்பட்ட பிறகும், அபராதத்தை செலுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
கடந்த ஆண்டு மட்டும் பதிவு செய்யப்பட்ட, 3.20 லட்சம் வழக்குகளில் ரூ. 21 கோடி அபராதம் வசூலிக்காமல் நிலுவையில் உள்ளது. இந்த அபராதத்தை வசூல் செய்ய, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 'அவுட்பாண்ட் டயலிங் சிஸ்டம்' என்ற போன் மூலம் நினைவூட்டப்படுகிறது.