sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மது போதையில் நண்பரை கொன்ற இருவருக்கு ஆயுள்

/

 மது போதையில் நண்பரை கொன்ற இருவருக்கு ஆயுள்

 மது போதையில் நண்பரை கொன்ற இருவருக்கு ஆயுள்

 மது போதையில் நண்பரை கொன்ற இருவருக்கு ஆயுள்


ADDED : பிப் 28, 2026 07:43 AM

Google News

ADDED : பிப் 28, 2026 07:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மது போதையில் நண்பரை கொன்ற இருவருக்கு ஆயுள்சிறை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் சிவா,30; பெ.நா.பாளையம், பாலமலை ரோட்டிலுள்ள தனம் நகரில் வாடகை வீட்டில் தங்கி கட்டட வேலைக்கு சென்றார்.

அரியலுார் மாவட்டம், வரதராஜன் பேட்டையை சேர்ந்த பால்ராஜ்,26, என்பவரும், சிவா குடியிருந்த பகுதியில் தங்கி கட்டட வேலை செய்தார். இருவரும் சேர்ந்து வேலைக்கு செல்வதால், தினசரி மது குடிப்பது வழக்கம்.

2023 டிச. 9ல், சிவா வீட்டில் வைத்து, பால்ராஜ், இவரது நண்பர் சாய்பாபாகாலனி, கே.கே.புதுார் விஜயபாரதி,26, ஆகிய மூவரும் சேர்ந்து மது குடித்தனர்.

அப்போது, அவர்களுக்கிடையே கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதில் பால்ராஜ், விஜயபாரதி சேர்ந்து, சிவாவை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

பெ.நா.பாளையம் போலீசார் விசாரித்து, இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது, கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது. நீதிபதி சிவகுமார், குற்றம்சாட்டப்பட்ட பால்ராஜ், விஜயபாரதிக்கு ஆயுள்சிறை, தலா ரூ. 5,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், வக்கீல் மோகன் பிரபு ஆஜரானார்.






      Dinamalar
      Follow us