/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு பகுதியில் வெளிச்சம் :மறுபகுதியில் இருளால் அச்சம்
/
ஒரு பகுதியில் வெளிச்சம் :மறுபகுதியில் இருளால் அச்சம்
ஒரு பகுதியில் வெளிச்சம் :மறுபகுதியில் இருளால் அச்சம்
ஒரு பகுதியில் வெளிச்சம் :மறுபகுதியில் இருளால் அச்சம்
ADDED : நவ 20, 2025 05:25 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில், மின் விளக்குகள் முழுமையாக எரியாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகம் உள்ளது. இரவு நேரத்தில் மக்கள் அச்சம் இன்றி பயணிக்கவும், விபத்தை தவிர்க்கவும், மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
இதில், சில மின் விளக்குகள் எரியாமல் இருந்தால், அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தது. தற்போது, இரவு நேரத்தில் பாலத்தின் ஒரு பகுதியில் இருக்கும் மின்விளக்குகள் மட்டும் எரிகின்றன.
இதனால், ஒரு பகுதியில் வெளிச்சமாகவும், மற்றொரு பகுதியில் இருள் சூழ்ந்தும் காணப்படுகிறது. இதுபோன்று வாரத்திற்கு இரு நாட்கள் பிரச்னை ஏற்படுகிறது. இதனால், இரவு நேரத்தில், மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, சர்வீஸ் ரோட்டில், அனைத்து மின்விளக்குகளையும் இரவு நேரத்தில் எரியும் வகையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

