/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருகிறது வெளிச்சம் மின் விளக்குகள் அமைக்கும் பணி துவக்கம்
/
வருகிறது வெளிச்சம் மின் விளக்குகள் அமைக்கும் பணி துவக்கம்
வருகிறது வெளிச்சம் மின் விளக்குகள் அமைக்கும் பணி துவக்கம்
வருகிறது வெளிச்சம் மின் விளக்குகள் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : டிச 29, 2025 05:42 AM

பெ.நா.பாளையம்: குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ரோட்டில், மின் விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வட மதுரையில் இருந்து, குமரன் மில் பஸ் நிறுத்தம் வரை, சோலார் மின்விளக்குகள் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டன.
ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக சோலார் மின் விளக்குகளுக்கான பேட்டரி பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்படாததால், இப்பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் ரோடு இருளில் மூழ்கியது.
இதனால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்துள்ள மேட்டுப்பாளையம் ரோட்டில், நள்ளிரவு நேரங்களில் விபத்துக்கள் அதிகரித்தன. தற்போது இப்பிரச்னைக்கான தீர்வு காணப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் ரோட்டில் வடமதுரையில் இருந்து குமரன் மில் பஸ் நிறுத்தம் வரை, 100 மின் கம்பங்கள் நிறுவப்பட்டு, அதில், 200 தெரு விளக்குகள் அமைக்கப்படுகின்றன.
இதனால் நள்ளிரவு நேரத்தில், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் தாராளமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டார மாவட்ட முன்னாள் கவுன்சிலர் கார்த்தி கூறுகையில், தனியார் நிறுவனத்தின், 40 லட்சம் ரூபாய் பங்களிப்புடன் மேட்டுப்பாளையம் ரோட்டில் வடமதுரையிலிருந்து குமரன் மில் பஸ் நிறுத்தம் வரை, 100 மின் கம்பங்களில், 200 லைட்டுகள் பொருத்தப்படுகின்றன.
பணிகள், 30 நாட்களுக்குள் செய்து முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றார்.

