தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரும்பு பொருட்கள், பெட்டிகளால் லைட்ஹவுஸ் ரோடு ஆக்கிரமிப்பு

இரும்பு பொருட்கள், பெட்டிகளால் லைட்ஹவுஸ் ரோடு ஆக்கிரமிப்பு

இரும்பு பொருட்கள், பெட்டிகளால் லைட்ஹவுஸ் ரோடு ஆக்கிரமிப்பு


ADDED : செப் 14, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பூமார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம். ரோடு, மார்க்கெட் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளால் மக்கள் நடப்பதே சிரமமாகியுள்ளது. பூமார்க்கெட்டை சுற்றியுள்ள ரோடுகள் குறுகலாக உள்ளன.

லைட் ஹவுஸ் ரோட்டில் ஏராளமான பழைய இரும்பு மற்றும் அட்டை பெட்டிக்கடைகள் உள்ளன. கடைக்காரர்கள் ரோட்டின் இரு பக்கமும் இரும்பு பொருட்கள், அட்டை பெட்டியை குவித்து வைக்கின்றனர்.

மக்கள் வாகனங்கள் இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். அங்கு பார்க்கிங் வசதியும் இல்லை. பண்டிகை காலங்களில் மார்க்கெட் வரும் மக்கள், அந்த ரோட்டில் வாகனங்களை நிறுத்த முடிவதில்லை.

இருக்கும் இடத்தில் வாகனங்களை நிறுத்தினாலும், மக்களிடம் கடைக்காரர்கள் தகராறு செய்கின்றனர். மக்களுக்கு தொந்தரவாக உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி, போக்குவரத்தை எளிதாக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us