/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்க!
/
கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்க!
கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்க!
கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்க!
ADDED : ஏப் 15, 2025 08:33 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், வழிபாட்டு தலங்களில், அதிக சப்தத்துடன் ஒலிக்கும் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை தவிர்க்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஐகோர்ட் உத்தரவுப் படி, கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், விழாக்காலம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை உள்ளது. ஆனால், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பெரும்பாலான நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, ரோட்டை ஒட்டிய மின் கம்பங்களில் அவை பொருத்துப்பட்டு, 45 டெசிபலுக்கு அதிகமான சப்தத்தில் பாடல் ஒலிக்கச் செய்யப்படுகிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள், வணிகக் கடைக்காரர்கள் என, பலரும் பாதிக்கின்றனர். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாட்டைக் கண்டறிந்து தடுக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
கூம்பு வடிவ ஒலிபெருக்கியால், ஒலி மாசு ஏற்படுவதை அறிந்தும் மத வழிபாட்டு பொறுப்பாளர்கள், அலட்சியத்துடன் உள்ளனர். விழாவின் போது, கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதுடன், அதிக சப்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்கின்றனர். அதற்கான நேரக் கட்டுப்பாடும் கிடையாது.
இதனால், குழந்தைகள், முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாதிக்கின்றனர். அந்தந்த பகுதி போலீசார், கூம்பு வடிவ ஒலிபெருக்கிப் பயன்பாட்டை கண்டறிந்து, தடுக்க வேண்டும். பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.