/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிங்கப்பெண்ணே! விருது வழங்கும் விழா
/
சிங்கப்பெண்ணே! விருது வழங்கும் விழா
ADDED : மார் 06, 2026 05:12 AM

கோவை, சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நீலாம்பூரில் உள்ள கதிர் கல்வி நிறுவனங்கள் சார்பில், 'சிங்கப் பெண்ணே!' விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. கதிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கதிர் தலைமை வகித்தார். செயலாளர் லாவண்யா வரவேற்றார்.
அவிநாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் பேசுகையில், ''எதையும் செய்ய வயது தடையாக இருப்பதில்லை. மகளிர் தினமும் உடல் பயிற்சி செய்ய வேண்டும். அதற்காக நேரம் செலவிடுவது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும்.
''தோற்றத்தை இளமையாக மாற்றுவதோடு வாழ்நாளையும் அதிகரிக்கும்'' என்றார்.
முன்னாள் பிரிகேடியர் அம்பிகா, ஏர்போர்ஸ் பைலட் அன்கிதா சிங், டி.ஐ.ஜி. ஆன்னி விஜயா, பாலம் சில்க்ஸ் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவே, பரத நாட்டிய கலைஞர் காயத்ரி, தடகள வீராங்கணை நவுசின் பானு, பயோமெக்கானிக் பிட்னஸ் நிறுவனர் ஜெயா மகேஷ், ஆடிட்டர் பானுமதி, பேஷன் டிசைனர் அபர்ணா சுன்கு, ஈவன்ட்ஸ் டுடே இயக்குநர் கவிதா ஆகியோருக்கு சிங்கப் பெண்ணே விருது வழங்கப்பட்டது. கதிர் கல்வி நிறுவன துணை தலைவர் நிதிலேஷ் பங்கேற்றனர்.
கதிர் மேலாண்மை கல்லூரியின் பேராசிரியர் பகுத்தறிவு நன்றி கூறினார்.

