/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளத்துக்கு அருகே தோட்டத்தில் மதுக்கடை: புதுத்தோட்டம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு
/
குளத்துக்கு அருகே தோட்டத்தில் மதுக்கடை: புதுத்தோட்டம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு
குளத்துக்கு அருகே தோட்டத்தில் மதுக்கடை: புதுத்தோட்டம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு
குளத்துக்கு அருகே தோட்டத்தில் மதுக்கடை: புதுத்தோட்டம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு
ADDED : நவ 05, 2025 12:07 AM
கோவை: கோவை மாவட்டத்தில், 250க்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளன. இதில், சின்னியம்பாளையத்தில் செயல்பட்ட, 2257 என்ற எண்ணுள்ள கடையில், மது விற்பனை குறைந்து வருவதாகவும், விமான நிலைய விரிவாக்கப் பகுதிக்குள் வருவதாலும், வேறிடத்துக்கு மாற்ற 'டாஸ்மாக்' நிர்வாகம் உத்தேசித்துள்ளது.
மாற்று இடமாக, மாநகராட்சி தெற்கு மண்டலம் 89வது வார்டுக்கு உட்பட்ட சுண்டக்காமுத்துார் கிராமம் புதுத்தோட்டம் முகவரியில் மதுக்கடை திறக்க, 'டாஸ்மாக்' அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் ஆட்சேபம் தெரிவித்து, கலெக்டர், 'டாஸ்மாக்' நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
கடிதத்தில், பொதுமக்கள் கூறியிருப்பதாவது:
நாங்கள் வசிக்கும் இடத்தை சுற்றிலும், 50 ஏக்கரில் விவசாய ம் செய்யப்படுகிறது. தென்னை, வாழை, கீரை, காய்கறி வகைகள் ஆண்டு முழுவதும் பயிர் செய்யப்படுகின்றன.
அருகாமையில் மதுக்கடை அமைத்தால், எங்களால் இயல்பான வாழ்க்கை வாழ முடியாது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, பெண்கள் தனியாக வெளியே சென்று வருவது கடினமாகி விடும்.
மதுக்கடை அமையும் இடத்துக்கு, கிழபுறம் செங்குளம் இருக்கிறது. டாஸ்மாக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்களை குளத்துக்குள் வீசுவதற்கு வாய்ப்புள்ளது. நீர் நிலை மாசுபடுவதோடு, உயிரினங்களுக்கும் பெருந்தீங்கு ஏற்படும்.
அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய குழந்தைகள், இவ்வழி தடத்தையே பயன்படுத்துகின்றனர். அதனால், மதுக்கடையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

