/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்.,ல் குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
/
கே.எம்.சி.எச்.,ல் குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
கே.எம்.சி.எச்.,ல் குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
கே.எம்.சி.எச்.,ல் குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
ADDED : மே 09, 2025 05:35 AM
'பெரியவர்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது அவசியம்,' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாரி விஜயராகவன்.
அவர் கூறியதாவது:
நமது உடலில் ரத்தத்தை சுத்தம் செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து வழங்குவதோடு, தேவையில்லாத பொருட்களை வெளியேற்றுவது கல்லீரல். இதில், பெரியவர்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்றில்லை. பிறந்த குழந்தைகளுக்கு கூட, பாதிப்பு ஏற்படலாம்.
கல்லீரலில் இருந்து வெளியே வரும் பித்தக்குழாய், பிறவியிலேயே சரியாக உருவாகாமல் இருந்தால், பித்த நாள அட்ரேசியா என்ற பாதிப்பு ஏற்படும். இதனால், பித்தநீர் குழாய் சுருங்கிக்கொண்டே இருக்கும். பித்தநீர் வெளியேற முடியாமல், ரத்தத்தில் கலந்து மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு, கல்லீரல் செயலிழந்து விடும்.
பிறக்கும்போதே இந்த பாதிப்பு இருப்பதை கண்டறிந்தால், முதல் மூன்று மாதத்துக்குள் அறுவை சிகிச்சை வாயிலாக சரி செய்து விடலாம்.
இல்லையெனில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். குழந்தை பிறந்தது முதல் 15 நாட்களுக்கு மேல் மஞ்சள் காமாலை இருந்தால், பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
குழந்தைகளுக்கு பித்த நீர் குழாய் மிக சிறியதாக இருக்கும். அந்த குழாயில் பாதிப்பு ஏற்பட்டு பலுான் போல் பெரிதாக வீங்கும்போது, இயல்பாக வெளியேற வேண்டிய பித்த நீர், வீங்கிய பகுதியில் தங்கி, கல் உருவாக வாய்ப்புள்ளது. இதனால், காய்ச்சல் மற்றும் காமாலை ஏற்பட்டு நாளடைவில், கல்லீரல் செயலிழந்துவிடும்.
இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அறுவை சிகிச்சை வாயிலாக குழாயை சரிசெய்தால், கல்லீரல் பாதிப்பை முழுமையாக தவிர்க்கலாம்.
இதை தவிர மரபணு சார்ந்த கல்லீரல் பாதிப்புகள் உள்ளன. அவற்றை முறையான மரபணு பரிசோதனைகள் வாயிலாக கண்டறிந்து உரிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கே.எம்.சி.எச்.,ல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ளன. குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. கல்லீரல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், இங்கு பிரத்யேக அவசர சிகிச்சைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, 87548 87568 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.