/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடை விழிப்புணர்வு முகாம் சிறந்த கிடாரிகளுக்கு ஊக்கப்பரிசு
/
கால்நடை விழிப்புணர்வு முகாம் சிறந்த கிடாரிகளுக்கு ஊக்கப்பரிசு
கால்நடை விழிப்புணர்வு முகாம் சிறந்த கிடாரிகளுக்கு ஊக்கப்பரிசு
கால்நடை விழிப்புணர்வு முகாம் சிறந்த கிடாரிகளுக்கு ஊக்கப்பரிசு
ADDED : டிச 25, 2025 06:01 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சந்தேகவுண்டன்பாளையம் கிராமத்தில், கால்நடை முகாம் நடத்தப்பட்டு, கால்நடை பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கால்நடைத்துறை, பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள ஊராட்சிகள்தோறும், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
முகாம் வாயிலாக, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் தேவையான தடுப்பூசி செலுத்தப்பட்டு, பராமரிப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, பொள்ளாச்சி அருகே சந்தேகவுண்டன்பாளையம் கிராமத்தில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
கோவை மண்டல இணை இயக்குனர் மகாலிங்கம் தலைமை வகித்தார். துணை இயக்குனர் சரவணன், உதவி இயக்குர் சக்ளாபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கால்நடை டாக்டர்கள் ரவிச்சந்திரன், பிரபாகரன், பயிற்சி டாக்டர்கள் ராஜ்குமார், ஆதில் குழுவினர் கால்நடைகளில் நோய் பாதிப்பை கண்டறிந்தனர். மேலும், மலட்டுத்தன்மை நீக்கம், சினைப்பரிசோதனை, குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், சுண்டுவாதம், தடுப்பூசி போடுதல் என, கால்நடைகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், தாது உப்புக்கலவை வழங்கி, சிறந்த கிடாரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

