/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மின்சார ஆட்டோ' வாங்க மகளிருக்கு கடன் வசதி
/
'மின்சார ஆட்டோ' வாங்க மகளிருக்கு கடன் வசதி
ADDED : நவ 01, 2025 12:32 AM
கோவை: 'மின்சார ஆட்டோ' திட்டத்தில் வழங்கப்படும் மானியத்தை பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மின்சார ஆட்டோ வாங்க, கூட்டுறவு வங்கி சார்பில், தலா 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, கோவையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் மற்றும் 39 கிளைகளில், இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
ஓட்டுநர் உரிமம், பேட்ச், குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராகவும், 45 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். வாகனத்தின் சாலை விலையில், 10 சதவீதம் தொகையை, கடன் வாங்குபவர் விளிம்பு தொகையாக செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும்; மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
தவிர, தமிழக அரசின் நல வாரியம் வாயிலாக உதவி தொகை பெறாத பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. வாகன விலை விபரம் அடங்கிய அறிக்கை உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கிகளை அணுகினால், கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

