/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் குழுக்களுக்கு ரூ.137 கோடியில் கடன்
/
மகளிர் குழுக்களுக்கு ரூ.137 கோடியில் கடன்
ADDED : ஜூன் 11, 2025 07:31 PM
கோவை; கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகள் வாயிலாக, கடந்த நிதியாண்டில், 1,693 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ.137 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, வேளாண் கடன், வேளாண் சாரா கடன்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் கடன், கல்வி கடன்கள், வீட்டு கடன் ஆகியவை வழங்குகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் போன்ற சிறப்பு கடன் திட்டங்களும் உள்ளன.
இதில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளில், கடந்த நிதியாண்டில், 2,440 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.189 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதில், கோவை மாவட்டத்தில் மட்டும், 1,693 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.137 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.