/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் முனைவோர் 232 பேருக்கு கடன்
/
தொழில் முனைவோர் 232 பேருக்கு கடன்
ADDED : ஏப் 16, 2025 10:24 PM
கோவை; கலைஞர் கைவினைத் திட்டத்தில், கோவை மாவட்டத்தில், 232 பேருக்கு கடன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
கலை மற்றும் கைவினைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய பிணையமில்லா கடன் வழங்கவும், அவர்களின் சந்தைப் படுத்தும் திறனை உயர்த்தவும், ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில், தமிழக அரசு சார்பில், கலைஞர் கைவினைத் திட்டம் செயல்பட்டு வருகிறது.
திட்டத்தின் கீழ், கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல் உட்பட 25 வகையான தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு, தொழில்திறன் சார் மேம்பட்ட பயிற்சியுடன், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு, தொழில் புரிய ரூ.3 லட்சம் வரை பிணையமில்லாமல் மானியத்துடன் கூடிய கடனுதவி, வங்கிகள் வாயிலாக வழங்கப்பட உள்ளது.
கடன் தொகையில் 25 சதவீதம், அதிகபட்சம் 50 ஆயிரம் மானியமாக வழங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில், இதுவரை 564 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பல கட்ட தேர்வுகளுக்கு பின், 232 பேருக்கு, கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.