sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உள்ளாட்சிகள் இணைப்பால் கிடைக்கும் எல்லோருக்கும் எல்லாம்! புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும்

/

உள்ளாட்சிகள் இணைப்பால் கிடைக்கும் எல்லோருக்கும் எல்லாம்! புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும்

உள்ளாட்சிகள் இணைப்பால் கிடைக்கும் எல்லோருக்கும் எல்லாம்! புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும்

உள்ளாட்சிகள் இணைப்பால் கிடைக்கும் எல்லோருக்கும் எல்லாம்! புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும்

2


ADDED : ஜன 28, 2025 08:39 AM

Google News

ADDED : ஜன 28, 2025 08:39 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாநகராட்சியுடன் ஒரு நகராட்சி, நான்கு பேரூராட்சிகள், 9 ஊராட்சிகள் என்று மொத்தம் 14 உள்ளாட்சி அமைப்புகளை இணைப்பதற்கு, மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில், பொதுமக்களின் எதிர்ப்புக்குரலை அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல,அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கோவை மாநகராட்சி, 257.04 ச.கி.மீ., பரப்பளவில் உள்ளது. இதை 158.36 ச.கி.மீ.,பரப்பளவு கொண்ட, ஒரு நகராட்சி, 4 பேரூராட்சி, 9 ஊராட்சிகள் என, 14 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, 415.40 ச.கி.மீ., எல்லையாக விரிவாக்கம் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

2011ல் 72 வார்டுகளாக இருந்த மாநகராட்சி, 100 வார்டுகளாக உயர்த்தப்பட்டது. இதற்காக அப்போதைய குறிச்சி, குனியமுத்துார் நகராட்சிகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. பெருகி வரும் மக்கள் தொகை, நகர்ப்புற வளர்ச்சி ஆகிய காரணங்களால், மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம், அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாநகராட்சியை ஒட்டி, 5 முதல் 7 கி.மீ.,சுற்றளவு கொண்ட உள்ளாட்சி அமைப்புகளை, மாநகராட்சியுடன் இணைக்க, மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

மாநகராட்சியுடன் 14 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த, தமிழக அரசு முடிவு செய்து அரசாணை பிறப்பித்தது.

அதன்படி மதுக்கரை நகராட்சி, பேரூர், வேடபட்டி, இருகூர், வெள்ளலுார் ஆகிய பேரூராட்சிகளும், நீலாம்பூர், மயிலம்பட்டி, சின்னியம்பாளையம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், அசோகபுரம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, சீரபாளையம் ஆகிய ஒன்பது ஊராட்சிகளை இணைத்தால், கோவை மாநகராட்சி 415.40 ச.கி.மீ.,பரப்பாக விரிவடையும். வார்டு எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்பே, உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும்.

இந்த இணைப்புக்கு, ஊராட்சி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராமங்களில் கருப்புக்கொடிகளை ஏற்றியுள்ளனர். நடந்து முடிந்த கிராமசபை கூட்டங்களை, சில ஊராட்சிகளில் புறக்கணித்துள்ளனர்.

இப்பிரச்னை குறித்து, ஊராட்சி உதவி இயக்குனர் கமலக்கண்ணன் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மொத்தம், 228 ஊராட்சிகள் உள்ளன. அதில் 9 ஊராட்சிகள் மாநகராட்சியோடு இணைய எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. சிலர் கிராமசபையை புறக்கணித்துள்ளனர். இது அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

இது தவிர கலங்கல், காங்கேயம்பாளையம், கணியூர், அரசூர் ஆகிய நான்கு ஊராட்சிகளை, பேரூராட்சியாக தரம் உயர்த்தவும், மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது பற்றிய கோரிக்கையும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

இணைப்பை எதிர்ப்பது ஏன்?

n குருடம்பாளையத்தை சேர்ந்த ரவி கூறுகையில், ''ஊராட்சியாக இருந்தால், மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் வாயிலாக மக்களுக்கு வேலையும், வருவாயும் கிடைக்கும். வீட்டுவரி, தொழில்வரி, திடக்கழிவு மேலாண்மை வரியும் இப்போது குறைவு. மத்திய, மாநில அரசுகளின் பெரும்பான்மையான சலுகைகள், ஊராட்சிகளுக்கு மட்டுமே கிடைக்கும். ஊராட்சி அமைப்பில் வார்டு கவுன்சிலராக, ஊருக்குள் வசிக்கும் ஒருவர் போட்டியிட்டு, வெற்றி பெற்று மக்கள் பணியாற்றலாம். ஆனால் மாநகராட்சியாக மாறினால் எதுவுமே நடக்காது,'' என்றார்.n பட்டணத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், ''எங்கள் கிராமத்திற்கு என்ன தேவை என்றாலும், அதை நாங்கள் எளிதாக ஒன்றிய கவுன்சிலர் அல்லது ஊராட்சி கவுன்சிலர் அல்லது மாவட்ட கவுன்சிலரிடம் சொல்லி, எளிதாக வேலையை முடித்துக்கொள்வோம். ஆனால் மாநகராட்சி என்றால் அது சிரமம். வீடு கட்ட அனுமதி பெறுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். வரிவிதிப்பு, மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை என்று எந்த ஒரு வேலைக்கும், மாநகராட்சியை அணுகி வேலையை முடிப்பதுசிரமம்,'' என்றார்.








      Dinamalar
      Follow us