/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரைவரிடம் 'ஜி பே'வில் பணம் பெற்று கள்ளநோட்டு கொடுத்து தப்பிய நபர் எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க!
/
டிரைவரிடம் 'ஜி பே'வில் பணம் பெற்று கள்ளநோட்டு கொடுத்து தப்பிய நபர் எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க!
டிரைவரிடம் 'ஜி பே'வில் பணம் பெற்று கள்ளநோட்டு கொடுத்து தப்பிய நபர் எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க!
டிரைவரிடம் 'ஜி பே'வில் பணம் பெற்று கள்ளநோட்டு கொடுத்து தப்பிய நபர் எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க!
ADDED : செப் 30, 2024 11:47 PM
கோவை : டிரைவரிடம் 'ஜி பே' வாயிலாக ரூ.10 ஆயிரம் பெற்று, கையில் கள்ளநோட்டு கொடுத்து தப்பிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 36; டிரைவர். நேற்று முன்தினம் மாலை வெங்கடேஷ் பீளமேடு பகுதியில் நின்றிருந்தார். அப்போது அவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், தான் பீளமேடு பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிவதாகவும், பொள்ளாச்சி செல்ல டாக்சி வேண்டும் எனவும் கூறியுள்ளார். வெங்கடேஷ் தனது காரை எடுத்துக்கொண்டு, பீளமேடு சென்று அந்நபரை ஏற்றிக்கொண்டார். ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் உள்ள, நட்சத்திர ஓட்டலில் தனது பொருட்களை எடுக்க, அங்கு செல்லும் படி கூறினார்.
ஓட்டலுக்குள் சென்ற அந்த நபர், வெங்கடேசையும் வருமாறு அழைத்தார். அங்கு இருவரும் சாப்பிட்டுள்ளனர்.
அந்த சமயத்தில், அந்த நபருக்கு போன் அழைப்பு வந்துள்ளது.
போன் பேசிய பின் அந்த நபர், வெங்கடேஷிடம் அவசரமாக ''பத்தாயிரம் ரூபாய் 'ஜி பே' வாயிலாக அனுப்ப வேண்டும்; என் மொபைல் போனில் அனுப்ப முடியவில்லை,'' என்று கூறியுள்ளார்.
மேலும், கையில் பணமாக இருப்பதாக கூறி உள்ளார். இதை நம்பிய வெங்கடேஷ் அந்த நபர் கூறிய மொபைல் போன் எண்ணுக்கு, ஜி பே வாயிலாக பத்தாயிரம் ரூபாயை அனுப்பி வைத்தார்.
இதை தொடர்ந்து அந்த நபர், ரூ.10,500 ஐ வெங்கடேஷிடம் கொடுத்தார். சிறிது நேரத்தில் போன் பேசுவது போல, அந்த நபர் ஓட்டலில் இருந்து வெளியே சென்றார். வெங்கடேஷ் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்த போது, அந்த நபர் மாயமாகியிருந்தார்.
போன் எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அந்த நபர் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை சரிபார்த்த போது, அது கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது.
வெங்கடேஷ் புகாரின்படி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து கள்ள நோட்டுக்களை கொடுத்து மோசடி செய்த நபரை, ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி தேடி வருகின்றனர்.