/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவிலில் கூர்ம அவதாரத்தில் பெருமாள்
/
அரங்கநாதர் கோவிலில் கூர்ம அவதாரத்தில் பெருமாள்
ADDED : ஜன 14, 2025 10:12 PM

மேட்டுப்பாளையம்:
காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. சொர்க்கவாசல் திறப்பு அன்று, இரவு ராபத்து உற்சவம் என்னும், திருவாய்மொழித் திருநாள் தொடங்கியது. கோவில் வளாகத்தில் அலங்காரம் செய்த அரங்கநாத பெருமாள் சுவாமி முன், கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாசர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி மற்றும் அர்ச்சகர்கள் பாசுரங்களை பாடி வருகின்றனர்.
நான்காவது நாளில் அரங்கநாத பெருமாள், கூர்ம அவதாரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பூஜை செய்ததை அடுத்து விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
அரங்கநாதர் கோவிலில் நேற்று, உத்திராயண புண்ய கால தொடங்கியதை அடுத்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து திருப்பாடல் எழுச்சியும், திருப்பாவையும் சேவிக்கப்பட்டது.திருவாராதனம், சாற்றுமுறை சேவித்த பின், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த் அறங்காவலர்கள் ராமசாமி கார்த்திகேயன் சுஜாதா ஜவகர் குணசேகரன் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் செய்திருந்தனர்.