ADDED : செப் 23, 2025 08:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை,; வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வால்பாறை இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கக்கன் காலனியை சேர்ந்த நாராயணசாமி, 59, என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, லாட்டரி சீட்டை பறிமுதல் செய்தனர்.