/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாடுகள் வரத்து குறைவு: விற்பனை விறுவிறுப்பு
/
மாடுகள் வரத்து குறைவு: விற்பனை விறுவிறுப்பு
ADDED : ஜன 14, 2025 09:30 PM

பொள்ளாச்சி:
பொங்கல் பண்டிகையால், பொள்ளாச்சி மாட்டு சந்தையில், மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது.
பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தால் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது.
வியாபாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு மாடுகளின் வரத்து குறைந்து காணப்பட்டது; 1,500 மாடுகள் மட்டுமே வரத்து இருந்தது. பொங்கல் பண்டிகை என்பதால் மாடுகள் வரத்து குறைந்து இருந்தது. எனினும், வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
நாட்டு காளை, 60 - 65 ஆயிரம் ரூபாய்; நாட்டு பசு, 40 - 45 ஆயிரம்; நாட்டு எருமை, 50 - 55 ஆயிரம்; முரா, 60 - 65 ஆயிரம்; ஜெர்சி, 30 - 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு, கூறினர்.