/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிரப்பள்ளி அருவியில் நீர்வரத்து குறைவு சுற்றுலாபயணியர் ஏமாற்றம்
/
அதிரப்பள்ளி அருவியில் நீர்வரத்து குறைவு சுற்றுலாபயணியர் ஏமாற்றம்
அதிரப்பள்ளி அருவியில் நீர்வரத்து குறைவு சுற்றுலாபயணியர் ஏமாற்றம்
அதிரப்பள்ளி அருவியில் நீர்வரத்து குறைவு சுற்றுலாபயணியர் ஏமாற்றம்
ADDED : டிச 29, 2025 05:38 AM

வால்பாறை: அதிரப்பள்ளி அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளதால், இருமாநில சுற்றுலாபயணியர் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி அருவி அமைந்துள்து. பருவ மழைக்கு பின், வால்பாறை மற்றும் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி அருவிகளில் குளு குளு சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலாபயணியர் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், அருவியில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்துவிடப்படுவதால், நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் அருவியை கண்டு ரசிக்க முடியாமலும், குளிக்க முடியாமலும் இருமாநில சுற்றுலாபயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'அதிரப்பள்ளி அருகே உள்ள பெரிங்கல்குத்து மின் உற்பத்தி நிலையத்தில் தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு, அந்த தண்ணீர் அதிரப்பள்ளி அருவி வழியாக செல்கிறது. ஆனால் பகலில் மின் உற்பத்தி குறைவாக உள்ளதால், தண்ணீர் திறக்கப்படுவதில்லை. மாறாக மாலை முதல் அதிகாலை வரை மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
பகல் நேரத்தில் அருவிக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளதால், சுற்றுலா பயணியர் அருவியை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்' என்றனர்.

